கார் நிறுத்துமிடத்தில் இருந்து மீட்கப்பட்டு உயிரிழந்த முதியவர் கொலை செய்யபட்டிருக்கிறார்: போலீஸ்

சிரம்பான் 2இல் உள்ள கார்  நிறுத்துமிடத்தில் அரை மயக்கத்தில் கிடந்த 77 வயது முதியவரின் மரணம் கொலை என போலீசார் வகைப்படுத்தியுள்ளனர். ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் கார்டன் ஹோம்ஸ் அருகே சாலையில் ஒரு நபரை போலீசார் கண்டுபிடித்து அவரை சிகிச்சைக்காக துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஹட்டா சே டின் கூறினார்.

நாங்கள் அவரைக் கண்டுபிடிக்கும் போது, அவர் இன்னும் உயிருடன் இருந்தார். ஆனால் அவரால் பேச முடியவில்லை.  இரத்தப்போக்கு அல்லது வேறு எந்த புலப்படும் காயங்களையும் நாங்கள் காணவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். ஏசிபி முகமட் கூறுகையில், அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 4 ஆம் தேதி இறந்தார்.

அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ததில், மழுங்கிய பொருளால் தலையில் தாக்கப்பட்டதால் அவர் மரணம் அடைந்தது தெரியவந்தது. இந்த வழக்கு, இப்போது கொலைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். நேரில் கண்ட சாட்சிகளை விசாரணை அதிகாரி ஏஎஸ்பி ஃபௌசன் அசிமாவை 019-791 8695 என்ற எண்ணில் அல்லது மாவட்ட காவல் நிலையத்தை 06-603 3222 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here