அர்செனலின் 3 கோல்கள்

பிரைட்டன் அணியுடனான இங்கிலாந்து பிரிமியர் லீக் ஆட்டத்தில் அர்செனல் அணி 0-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் அர்செனல் அணி அரங்கில் நடைபெற்றது.

அதில் அர்செனல் அணிக்கு 33ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி சாக்கா அவ்வணிக்கான முதல் கோலை புகுத்தினார். இதனையடுத்து முதல் பாதி நேரம் 0-1 என்ற கோல் கணக்கில் முடிவுற்றது.

இந்நிலையில் 62ஆவது நிமிடத்தில் கய் ஹவேர்த்ஸ் அர்செனல் அணிக்கான 2ஆவது  கோலை புகுத்திய நிலையில் 86ஆவது நிமிடத்தில் திரோசர்ட் 3ஆவது கோலை புகுத்தினார்.

இதனையடுத்து ஆட்டம் அர்செனல் அணிக்கு சாதகமாக முடிவுற்றது. இம்முறை பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அணிகளில் அர்செனலும் ஒன்று. அவ்வணி இத்தவணையில் இதுவரை 31 ஆட்டங்களில் களம் இறங்கியுள்ளது.

அதில் 22 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஐந்தில் சமநிலை கண்டு 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ள அவ்வணி பட்டியலில் 71 புள்ளிகளை கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here