கங்கார்:
நாட்டில் தற்போது தினமும் ஒரு சர்ச்சை என்று வரிசை கட்டி வருகிறது. “அல்லாஹ் “ என்ற அரபு எழுத்து வடிவத்துடன் ஒத்துப்போவது போல வடிவம் கொண்ட சின்னம் இருந்ததாக கூறப்பட்ட காலுறை மற்றும் காலணி விவகாரத்தை அடுத்து, புதிதாக பெர்லிஸில் உள்ள ஹோட்டல் ஒன்றின் லோகோவையும் இந்த விமர்சனம் விடவில்லை.
“ஆல் இன்” என்ற ஹோட்டலின் லோகோ, அதாவது அதன் பெயர் அரபு எழுத்துக்களில் “அல்லாஹ்” என்ற வார்த்தையைப் போல் தெரிகிறது என்று, தனக்கு தெரிவிக்கப்பட்டது என்று, பெர்லிஸ் முஃப்தி டத்தோ முகமட் அஸ்ரி ஜைனுல் ஆபிடின் கூறினார்.
இது தொடர்பில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என்று அவர் பொதுமக்களை எச்சரித்தார்.
மேலும் குறித்த ஹோட்டல் உரிமையாளரிடம் இது குறித்து வினவியபோது, தாங்கள் “அல்லாஹ்” என்று எழுதவில்லை என்றும், அது “All in” என்ற ஆங்கில வார்த்தையின் அரபி எழுத்து என்றும் கூறினார்.
எனவே இதில் மதத்தை சிறுமைப்படுத்தும் செயல் எதுவும் இடம்பெறவில்லை என்றும், தவறாக எண்ணம் இல்லை என்றால் பிரச்சனையௌ ஏற்படுத்தாதீர்கள் என்று நேற்று (ஏப்ரல் 8) தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறினார்.
























