வரலாற்றில் புதிய திருப்பமா? தென் கொரிய ஜனாதிபதி யூன் கைது.

டணிஸ்தா சுரேஸ்

SEOUL
தென் கொரிய அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யபட்ட ஜனாதிபதி யூன்-னை கிலரிச்சி குற்றச்சாட்டிற்காக கைது செய்தனர். ஜனாதிபதியை கைது செய்வது இதுவே தென் கொரிய வரலாற்றில் முதல் முறை என்றாலும் ஆசியாவிலேயே மிக, உற்சாகமான ஜனநாயக நாடுகளில் ஒன்றான நாடாக திகழ்வது சமீபத்தில் அடைந்த வளர்ச்சியாகும்.

தென் கொரியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், டிசம்பர் 3ஆம் தேதி, சீரற்ற இராணுவ சட்டத்தை அறிவித்தவுடன், யூனை பதவியில் இருந்து நீக்க வாக்களித்தனர். அதன் பின்னர், அவர் மலைப்பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்தார், அங்கு அவரது பாதுகாப்பு படை கைது முயற்சியைத் தடுக்கும் வகையில் நடந்து கொண்டனர்.

இன்று அதிகாலை முதல் அவரைக் கைது செய்ய 3,000 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு அணிவகுத்துச் சென்ற பின்னர், வன்முறையைத் தவிர்ப்பதற்காக தன் விசாரணைக்கு ஒப்புகொண்டதாக அவர் கூறினார்.

தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் கைது செய்யப்பட்டு, அவரது வாகனக்குழாம் ஜனவரி 15, 2025 அன்று சியோலில் செல்லும் போது — படத்தொகுப்பு

பின்னர், யூன் தனது இல்லத்தை விட்டு வாகன அணிவகுப்பில் CIO அலுவலகத்திற்கு வந்தடைந்தார்.யூனை விசாரிப்பதற்கு தற்போது அதிகாரிகலுக்கு 48 மணி நேரம் உள்ள நிலையில், அதன் பிறகு அவரை தடுத்து வைப்பதற்காக வாரன் ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் இல்லையென்றால் அவரை விடுவிக்க வேண்டும். யூன் வழக்கறிஞர்கள், அவரை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை என கூறினர்.

யூன் இராணுவ சட்டத்தை அறிவித்தது தென் கொரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது , ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதாரம் அதிர்ச்சியுற்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், டிசம்பர் 14ஆம் தேதி, அவரை பதவியிலிருந்து நீக்க தீர்மானித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here