பட்டாசு வெடித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த 4 பேர் கைது

கோத்தா பாருவில் நேற்று அதிகாலை 3 மணியளவில்  லெம்பா சிரே அருகே பட்டாசு வெடித்த  நான்கு பேரை கிளந்தான் போலீசார் கைது செய்தனர். 22 முதல் 27 வயதுக்குட்பட்ட ஆண்கள், லோட்டஸ் சூப்பர் மார்க்கெட் மற்றும் சுல்தான் யஹ்யா பெட்ரா பாலம் அருகே பட்டாசு வெடித்து, குழப்பத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக கோத்தா பாரு போலீஸ் தலைவர் ரோஸ்டி டாட் கூறினார்.

சம்பவம் தொடர்பாக எங்களுக்கு 999 அழைப்பு வந்தது. எனினும், உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. கைதிகள் வாக்குமூலங்கள் எடுக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதுபோன்ற நடத்தைகளில் இருந்து விலகி இருக்குமாறு அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமைதியை சீர்குலைக்கும் வகையில் பட்டாசு வெடிப்பது அல்லது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிப்பது சிறு குற்றச் சட்டம் 1955ன் பிரிவு 13ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று ரோஸ்டி எச்சரித்தார். உயிர் அல்லது உடைமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே வெடிப்புகளை உண்டாக்கும் அல்லது வெடிபொருட்களை வைத்திருக்கும் நபர்கள் மீது வெடிபொருள் சட்டம் 1957 இன் பிரிவு 7 இன் கீழ் வழக்குத் தொடரப்பட்டு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, RM10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here