LRT3 கட்டுமான தளத்தில் கேபிள் திருட்டு; ஐந்து கட்டுமான தொழிலாளர்கள் கைது

கோலாலம்பூர்:

LRT 3 கட்டுமான தளத்தில் கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு பாகிஸ்தானியர் உட்பட ஐந்து ஆண் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று (ஆகஸ்ட் 1) மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை ஷா ஆலம் மற்றும்டாமன்சாராவில் குறித்த சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் கூறினார்.

ஜாலான் பெர்சியாரான் ராஜா மூடா, பிரிவு 2 மற்றும் பெர்சியாரான் டத்தோ மந்திரி, ஷா ஆலம் மற்றும் கேயு ஆரா டாமன்சாராவில் உள்ள 14வது பிரிவு ஆகியவற்றில் உள்ள LRT 3 கட்டுமான தளங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

“சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கார், ஒரு சாவி மற்றும் ஆறு மொபைல் போன்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக” இன்று (ஆகஸ்ட் 2) நடைபெற்ற ஓர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

“இந்தக் கும்பல்,LRT 3 திட்ட ஒப்பந்ததாரரிடம் பணிபுரிந்ததாகவும், கட்டுமானப் பகுதிகளிலிருந்து சிறப்பு வாடகை டிரக்கைப் பயன்படுத்தி கேபிள்களைத் திருடி, பின்னர் கேபிள்கள் வெட்டப்பட்டு கிள்ளான் சுற்றுப்புற உலோகக் கடைகளில் விற்கிறார்கள்” என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக முகமட் ஷுஹைலி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here