கூச்சிங்கில் இங்கிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செமடான், கம்போங் செபாட் என்ற இடத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட நீர் பெருக்கு சம்பவத்தைத் தொடர்ந்து ஒருவர் உயிரிழந்த வேளை மற்றொருவரைக் காணவில்லை. சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் இந்த சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டதாக தெரிவித்தனர். அவர்களில் இருவர் கிராம மக்களால் மீட்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளனர்.
மற்றொரு பாதிக்கப்பட்டவர் கிராம மக்களால் ஆற்றில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. மற்றொரு பாதிக்கப்பட்டவர் இன்னும் காணவில்லை. மீதமுள்ள பாதிக்கப்பட்டவரைத் தேடி மீட்பதற்கான முயற்சிகள் இரவு 7 மணிக்கு இடைநிறுத்தப்பட்டன. மேலும் தேடல் இன்று தொடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.