ஆசியான் மால் பட்டாணி, தாய்லாந்தில் நடைபெறும் 2024 ஆசியான் சுற்றுலா விழாவில் நெகிரி செம்பிலான் மாநில அரசு பங்கேற்கும். ஏப்ரல் 25 தொடங்கி ஏப்ரல் 28ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் நெகிரி செம்பிலான் உட்பட மலேசியாவின் சுற்றுலாத் தலங்கள் பிரபலப்படுத்தப்படும். அதே சமயம் ஜூலை 31ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 4ஆம் தேதி வரை நடைபெறும் ஆசியான் பட்டாணி தாய்லாந்தில் நடைபெறும் ஆசியான் நாடுகளின் சந்தையில் நெகிரி செம்பிலான் மாநிலத்தை சேர்ந்த தொழில் முனைவர்களின் தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
இதற்கான ஒரு நிகழ்ச்சியை நெகிரி செம்பிலான் மாநில தொழில் முனைவோர் பருவ நிலை மாற்றம் மனிதவளம் கூட்டறவு கழகம் பயனீட்டாளர் நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.வீரப்பனும் நெகிரி செம்பிலான் மாநில சுற்றுலா கலை கலாச்சாரத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் புவான் நிக்கோல் டான் நீ குனூம் கூட்டாக தொடக்கி வைத்தனர். இதில் யுனிட்டி ஆசியா குரூப் தலைவர் டத்தோ ஜமால் முகமட் அமீன் யுனிட்டி ஆசியா குரூப் பொது உறவுத்துறை இயக்குநரும் ஜே சி ஸ்கோப் மார்க்கெட்டிங் தோற்றுவருமான ஜி ஜெய்சந்திரன் கோபாலாவும் கலந்து கொண்டனர்.