KLIAஇல் சூப்பாக்கி சூடு நடத்திய ஆடவருக்கு 3 குற்றப்பதிவுகள் உள்ளன: டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி தகவல்

புத்ராஜெயா: இன்று அதிகாலை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) டெர்மினல் 1 இல் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபருக்கு மூன்று கடந்த குற்றப் பதிவுகள் இருக்கிறது. கூட்டரசு போலீஸ் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன், சந்தேக நபரிடம் மிரட்டல் (தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506) திருட்டு மற்றும் அரசு ஊழியராக ஆள்மாறாட்டம் செய்ததற்காக இரண்டு கடந்த பதிவுகள் இருப்பதாகக் கூறினார் (சட்டப்பிரிவு 380/பினல் கோட் பிரிவு 170).

இன்று அதிகாலை, டெர்மினல் 1 இல் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாவலர் பலத்த காயமடைந்தார். சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் ஒரு அறிக்கையில், விமான நிலையத்தின் வருகை மண்டபத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here