சிங்கப்பூரின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் வரும் மே 15ஆம் தேதி பிரதமராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்பார் என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு முதல் நாட்டை வழிநடத்திய தற்போதைய பிரதமர் லீ சியென் லூங் பதவி விலகத் தயாராகி வரும் நிலையில், சேனல் நியூஸ் ஏசியா இந்த செய்தி வெளியிட்டது. பிரதமர் லீ சியென் லூங் தனது பதவியை 15 மே 2024 அன்று ராஜினாமா செய்வார். அவருக்குப் பின் துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரான லாரன்ஸ் வோங்கை நியமிக்குமாறு அதிபருக்கு முறையாக ஆலோசனை வழங்குவார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வோங்கிற்கு ஆளும் மக்கள் செயல் கட்சி (PAP) நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதாகவும், உயர் பதவியை கைப்பற்றுவதற்கான அவரது நிலையை வலுப்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அதிபர் அலுவலகமான இஸ்தானாவில் இரவு 8 மணிக்கு விழா நடைபெற உள்ளது. நவம்பர் 2025இல் வரவிருக்கும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக வோங்கிற்கு அந்த பதவியை வழங்குவதாக லீ சூசகமாக கூறியபோது, ஒப்படைப்பு திட்டம் முதன்முதலில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்படுத்தப்பட்டது. இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2022இல் தனது 70ஆவது பிறந்தநாளுக்கு முன்பாக ராஜினாமா செய்ய லீயின் ஆரம்ப நோக்கம் தள்ளி வைக்கப்பட்டது.









