கோலாலம்பூர்,
இம்மாதம்21,22ஆம் தேதிகளில் நடத்தப்படவிருக்கும் ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்தப் போட்டியை மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் நிறைவு செய்து வைப்பார் என 2020 கால்பந்து கிளப் தலைவர் ஏஎஃப்பி ராஜன் தெரிவித்தார்.
இந்தப் போட்டியானது இரண்டாவது முறையாக நடைபெறும் நிலையில் அதனை மலேசியா ஏற்று நடத்துகிறது.
சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் ஐஆர்சி அரங்கில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து 2020 கிளப் களம் இறங்குகிறது.
அதோடு சேர்த்து இந்தியாவில் இருந்து 4 அணிகளும் சிங்கப்பூர், இந்தோனேசியாவில் இருந்து தலா ஓர் அணியும் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
இந்தப் போட்டிக்கு டத்தோஸ்ரீ சரவணன், டத்தோ மோகன் உட்பட பல நல்லுள்ளங்கள், பல நிறுவனங்கள் ஆதரவு வழங்கி இருப்பதாகவும் ராஜன் கூறினார்.