பிரான்ஸ் சென்றடைந்தது  ஒலிம்பிக் தீப்பந்தம்

Performers assemble the Olympic Rings during the opening ceremony of the Tokyo 2020 Olympic Games, at the Olympic Stadium, in Tokyo, on July 23, 2021. (Photo by Jewel SAMAD / AFP)

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தீப்பந்தம் பிரான்சிற்கு அதிகாரப்பூர்வமாக கொண்டு செல்லப்பட்டது. கிரீஸ்,  ஒலிம்பியாவில் அந்தத் தீப்பந்தத்தை ஏற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி நடத்தப்பட்டதும் தீப்பந்தம் பிரான்சிற்குக் கொண்டு செல்லப்பட்டது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி கிரீசில் தொடங்கப்பட்டதை அடுத்து ஒவ்வொரு  முறையும் இந்தத் தீப்பந்தம் ஏற்றப்படுகிறது.

1936ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற வெயில் கால ஒலிம்பிக் விளையாட்டுப்  போட்டியில் முதன் முறையாக இந்தத் தீப்பந்தம் பயன்படுத்தப்பட்டது.

குறிப்பாக கடல் கடந்த பின்னர் 41 நகரங்கள் வாயிலாக 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு அந்தத் தீப்பந்தம் கொண்டு செல்லப்படும். இம்முறை பாரிஸ் ஒலம்பிக் போட்டிக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் கால அவகாசம் உள்ளது.

எனவே இந்தப் போட்டிக்கான அனுபவம் வேறு மாதிரியாக உள்ளது. மில்லியன் கணக்கான பிரான்ஸ் மக்கள் இந்த விளையாட்டை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இம்முறை ஒலிம்பிக் போட்டி ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11ஆம் தேதி  வரையில் நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here