தெமெர்லோ:
பகாங்கின் தெமெர்லோ பகுதியிலுள்ள குப்பை கொட்டும் கிடங்கில் டசன் கணக்கில் அரிசிப்பைகள், மாவு, சாடின் என பெருமளவில் கொட்டப்பட்ட சம்பவம் குறித்தி சமூக ஊடகங்களில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.
தற்போது நாட்டில் பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லா பிரச்சனை, வறுமையில் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், இவ்வாறு உணவுப் பொருட்களை பொறுப்பில்லாது குப்பைகளில் கொட்டியிருப்பது மக்களிடையே பெரும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.
இந்த உணவுப்பொருட்கள் காலாவதியானதாக இருந்தாலும்கூட, அவை காலாவதியாகும்வரை பயன்படுத்தாது விட்டது சம்மந்தப்பட்டவர்களின் பொறுப்பற்ற செயல் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த மோசமான செயலுக்கு தாம் காரணம் என பொறுப்பேற்றுள்ளார் முன்னாள் கோலக்கிராவ் நாடாளுமன்ற உறுப்பினர்.
அந்த உணவுக் கிடங்கில் பல இறந்த எலிகளாலும், அழுகிய உணவுகளாலும் துர்நாற்றம் வீசுவதைத் தொடர்ந்து தாமே அவற்றை அப்புறப்படுத்தும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக கூறுகிறார் டத்தோஸ்ரீ இஸ்மாயில் முகமது சைட்.