கொழும்பு:
தனது மனைவியின் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு, கணவன் போலிஸ் நிலையத்தில் சரணடைந்த பரபரப்பான சம்பவம் ஒன்று இலங்கையில் நடந்துள்ளது.
“எனக்கும் என் மனைவிக்கும் இடையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாகவிருந்தது. என் மனைவிக்கும் இன்னொருவருக்கும் உள்ள நெருக்கமான தொடர்பு குறித்துதான் இந்த சண்டைகள் நடந்தன. ஆனாலும் நான் அவரை மன்னித்து சமாதானாமாக நடந்து கொண்டேன்.
எனினும் இப்போது சில நாட்களாக, சிலர் எனக்கு, எனது மனைவி குறித்த பல ஆதாரங்களை அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து என் மனைவியிடம் கேட்க தொடங்கியபோது அது பெரும் சண்டையில் முடிவடைந்தது” என போலீஸ் விசாரணையில் அவ் ஆடவன் குறிப்பிட்டுள்ளான்.
இலங்கை வவுனியாவில் நடந்த இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைராகிவருகின்றன. கொலை செய்யப்பட்டவர் 32 வயதான முன்பள்ளி ஆசிரியை எனவும், 3 மாத கர்ப்பமானவர் எனவும் போலிஸார் குறிப்பிட்டனர்.
“எங்களுக்குள் வந்த சண்டைக்கு முடிவு காண, அவளை நான் போலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தேன், பின்னர் வீடு திரும்பும் வழியிலும் சண்டை மீண்டும் முற்றியது. இதனால் கோபமடைந்த நான் அவளின் கழுத்தை அறுத்து, உடலை பக்கத்தில் உள்ள காட்டுக்குள் வீசி விட்டு தலையை மட்டும் எடுத்துக்கொண்டு போலிஸில் சரணடைந்தேன் என அந்த ஆடவன் விசாரணையில் கூறியிருக்கிறான்.
சந்தேகநபரான அந்த 34 வயது கணவன் இன்று நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லபப்பட்டுள்ளான்.





















