இடைவிடாத வெற்றி சாதனை முறியடிப்பு

இடைவிடாது 34 ஆட்டங்களில் வெற்றி பெற்று வந்த அல் -ஹிலால் கால்பந்து அணியின் சாதனை முடிவுக்கு வந்தது. நேற்று அதிகாலை நடைபெற்ற ஆசியா சாம்பியன்ஸ் லீக் போட்டியின் அரையிறுதிச் சுற்றுமுதல் ஆட்டத்தில் அவ்வணி 4-2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரசு சிற்றரசை சேர்ந்த அல்-அய்ன் அணியிடம் தோல்வி கண்டது.

நான்கு முறை ஆசிய சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளர்களான அல்-ஹிலால் அணி ஆகக் கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்தது.

சுமார் 7 மாதங்கள் கழித்து அடுத்த தோல்வியை அவ்வணி சந்தித்துள்ளதால் அதன் ரசிகர்கள் சோகத்தில்ஆழ்ந்துள்ளனர். இதனிடையே முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் மொரோக்கோ ஆட்டக்காரர் ரஹிமி மூன்று கோல்கள் புகுத்தி ஹாட்ரிக் சாதனை  புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here