மரத்தின் மீது மோதுவதை தவிர்க்க முயன்ற போது ஏற்பட்ட விபத்து: பெண் பலி – இருவர் படுகாயம்

ஜார்ஜ் டவுன்: இன்று அதிகாலை ஜாலான் மகாலிஸ்டர் என்ற இடத்தில் மரத்தின் மீது மோதுவதில் இருந்து தவிர்க்க முயன்ற போது  கார் சாலையை விட்டு விலகியதில் இரண்டு ஆண்கள் பலத்த காயங்களுக்கு உள்ளானதோடு மாது ஒருவர் இறந்தார். ஃவோக்ஸ்வேகன் காரை ஓட்டி வந்த 24 வயதான ஃபூ யு சுவான், பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கை அதிகாரி ஷாரி மன்சோர் கூறுகையில் சம்பவம் குறித்த பேரிடர் அழைப்பு அதிகாலை 4.20 மணிக்கு வந்ததாகவும், ஜாலான் பேராக் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறினார். தீயணைப்பு வீரர்கள் வந்தவுடன் அவர்கள் ஒரு காரைக் கண்டார்கள். மரத்தில் மோதியதற்கு முன் சாலையை விட்டு அக்கார் விலகியதாக நம்பப்படுகிறது.

காருக்குள் சிக்கியிருந்த இரண்டு ஆண்களையும் ஒரு பெண்ணையும் நாங்கள் மீட்கத் தொடங்கினோம். அவர்கள் அனைவரும் அதிகாலை 5.27 மணியளவில் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் (சம்பவ இடத்தில்) இறந்துவிட்டதை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது என்று அவர் பெர்னாமாவிடம் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here