ஈப்போவில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) நள்ளிரவு 12.01 மணியளவில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் (NSE) 242.3 கி.மீட்டரில் விரைவுப்பேருந்து தீப்பிடித்ததில் ஓட்டுநர் உள்ளிட்ட 16 பயணிகள் பயங்கரமான அனுபவத்தை எதிர் கொண்டனர். நள்ளிரவு 12.01 மணிக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததையடுத்து, கோல கங்சார் மற்றும் மேரு ராயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் அந்த இடத்திற்கு அனுப்பியதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி முஹமட் ஃபவாஸ் அப்துல் ஜமீல் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில், விரைவுப் பேருந்து 80% சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை திணைக்களத்தின் முகநூல் பக்கத்தின் ஒரு அறிக்கையில், இதில் ஓட்டுநர் உட்பட 16 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பாக இருந்தனர் என்றும் தீயணைப்பு படை சம்பவ இடத்திற்கு வந்தபோது மற்றொரு பேருந்திற்கு மாற்றப்பட்டனர் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று 12.51 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததோடு நள்ளிரவு 1.34 மணியளவில் தீயை முழுமையாக அணைத்தனர்.