தோல்விக்கு அதுதான் காரணம் – ருதுராஜ் கெய்க்வாட்

ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரின் 39ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி லக்னோவிடம் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் லக்னோ அணி வீரர் ஸ்டோயினிஸ்-க்கு பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 13ஆவது ஓவர் வரை போட்டி எங்களின் கையில் தான் இருந்தது, ஆனால் ஸ்டோயினிஸ் சிறப்பாக விளையாடினார். எங்களது தோல்விக்கு பனி முக்கிய காரணமாக அமைந்தது.

பனி அதிகம் இருந்ததால் பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்த  முடியவில்லை. போட்டியை இன்னும் சிறப்பாக கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் இதுவும் போட்டியின் ஒரு பகுதிதான். இதைக் கட்டுப்படுத்த முடியாது. போட்டி முடிவில் லக்னோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here