புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது ஜேடிதி

 

2024, 2025 சூப்பர் லீக் போட்டி, ஆசிய லீக் போட்டிகளின், புதிய பருவத்தில் களமிறங்குவதற்கு, ஜோகூரின் ஜேடிதி தனது புதிய ஜெர்சியை நேற்று அதன் அரங்கில் அறிமுகப்படுத்தியது.

சொந்த அரங்கில் விளையாடும்போது அணிந்துகொள்ள நீலம், சிவப்பு நிற ஜெர்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், எதிரணியின் இடங்களில் விளையாடுவதற்கு வெள்ளை நிற ஜெர்சிகள் பயன்படுத்தப்படும் என்று ஒஈகூ தெரிவித்தது.

தனது ரசிகர்களை கவர்வதற்காக, ஜேடிதி எப்போதும் புதிய ஜெர்சி வடிவமைப்பை கையாளும். ஜோகூர் கொடியின் பாரம்பரிய வண்ணங்களான சிவப்பு, நீல நிறங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும் அது, இம்முறை புதிய பாணியில் அதனை பயன்படுத்தி வடிவமைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here