இந்தத் தவணை சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணி காலிறுதிச் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினாலும் அது தமக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தவில்லை என்று அவ்வணி நிர்வாகி கோர்டியாலா தெரிவித்துள்ளார்.
நாங்கள் கடந்த தவணையில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தோம். அந்த மூன்று போட்டியும் மிக முக்கியமானவை. அதேபோல் இந்த முறையும் மீண்டும் அச்சாதனையை புரிய இலக்கு கொண்டிருந்தோம். குறிப்பாக ரியல் மாட்ரிட் அணியுடனான இந்த காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் எனது அணி ஆட்டக்காரர்கள் வெற்றி பெறுவதற்கு அனைத்தையும் வழங்கின
ஆனால் அதேசமயம் ரியல் மாட்ரிட் அணியும் சிறந்த விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தியது என்றார் அவர். மேலும் கால்பந்து விளையாட்டில் வெற்றி தோல்வியை கணிக்க முடியாது. எனவே இந்த தோல்வியினால் நான் பெரும் கவலை கொண்டிருக்கவில்லை.
இருப்பினும் எஞ்சியிருக்கும் இங்கிலாந்து பிரிமியர் லீக், எப்ஏ கிண்ண போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெறுவதை உறுதி செய்வோம் என கோர்டியாலா கூறியுள்ளார்.









