பலத்த காற்று: கோல மூடாவில் 14 வீடுகள் சேதம்

சுங்கை பட்டாணி:

இன்று பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால், ஏழு கிராமங்களில் உள்ள 14 வீடுகள் சேதமடைந்தன.

ஜெனியாங்கில் உள்ள கம்போங் கோலா தஹானான் மற்றும் முக்கிம் குரூன் ஆகிய இடங்களிலுள்ள 4 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று, கோல மூடா மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி, கேப்டன் அசார் அஹ்மட் கூறினார்.

மேலும் பெதுலா துணை மாவட்டத்தில் கம்போங் பெராபிட்டில் உள்ள ஒரு வீடும், சுங்கை பாசீர் துணை மாவட்டத்தில் உள்ள கம்போங் தெலுக் வாங் பெசார், கம்போங் தெலுக் வாங் கெச்சில் ஆகிய இரண்டு வீடுகளும், கம்போங் புக்கிட்டில் மூன்று வீடுகளும் , கம்போங் மஸ்ஜிட்டில் இரண்டு வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“இருப்பினும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை” என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here