சிரம்பான்:
இங்குள்ள எம்பிஎஸ், ஜாலான் சிரம்பான்-தாம்பின் அருகே நேற்று மாலை 6 மணியளவில், ஐந்து வாகனங்கள் மோதிய விபத்தில் 74 வயதான ஓய்வு பெற்ற இராணுவவீரர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பேருந்து, ஒரு லோரி, இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை மோதிக்கொண்டன.
“அம்பாங்கானில் இருந்து போர்ட்டிக்சன் நோக்கிச் சென்ற புரோட்டான் வீரா கார், இடது பாதையை சேதப்படுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.



















