ஜோகூரில் சட்டவிரோதமாக கடை நடத்தி வந்த வெளிநாட்டினர் மூவர் கைது

ஜோகூர் பாரு:

ங்குள்ள இரண்டு ரம்லான் பசார்களில் சட்டவிரோதமாக கடைகளை நடத்தி வந்ததாக நம்பப்படும் மூன்று வெளிநாட்டினரின் தந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜோகூர் பாரு நகராண்மை கழகம் (MBJB) தெரிவித்துள்ளது.

அத்தோடு ஏமன், வங்காளதேசம் மற்றும் இந்தோனேசியாவில் இருந்து தருவிக்கப்பட்டதாக நம்பப்படும் குறித்த சந்தேக நபர்களின் பொருட்களை தாம் கைப்பற்றியதாக ஜோகூர் நகராண்மை கழகத்தின் தலைவர், மேயர் டத்தோ முகமட் நூராசாம் ஒஸ்மான் கூறினார்.

“ரமலான் பசார்களில் MBJB வழக்கமான சோதனைகளை நடத்தி வருகிறது. இதில் வெளிநாட்டினரின் வியாபரம் செய்வதற்கு அனுமதியில்லை” என்று அவர் ரமலான் பசார் அமைப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

“இந்த வெளிநாட்டு வியாபாரிகளிடமிருந்து அவர்களது பொருட்களை கைப்பற்றியதுடன் நாங்கள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் பண்டார் பாரு உடா மற்றும் தாமான் அங்கேரிக் ஆகிய இடங்களில் உள்ள ரமலான் பசார்களில் கடைகளை நடத்தி வருகின்றனர்.

“ஜோகூரில் உள்ள அனைத்து 16 உள்ளூர் அமலாக்க நிறுவனங்களும் இணைந்து, இந்த சிக்கலை தீர்க்க அமலாக்கத்தை முடுக்கிவிடுவார்கள் என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் அவர் கூறினார்.

உள்ளூர் கவுன்சில்கள் ஒருபோதும் வெளிநாட்டவர்களுக்கு வணிகங்களை நடத்த உரிமங்களை வழங்கவில்லை என்பதை அனைத்து தரப்பிற்கும் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here