கோலாலம்பூர்: இன்று தொழிலாளர் தின கொண்டாட்டத்தையொட்டி மாமன்னர் தம்பதியர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் ராஜா ஜரித் சோபியா ஆகியோர், நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் தங்கள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
மலேசியா ஒரு சிறந்த நிலையை நோக்கி முன்னேறுவதற்கு உந்து சக்தியாக தொழிலாளர்களே உள்ளனர். உங்கள் முயற்சிகள், அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுக்கு நன்றி. ஒவ்வொரு அடுக்கு தொழிலாளர்களின் அயராத அர்ப்பணிப்பு இல்லாமல் முன்னேற்றம் அடைய முடியாது.
‘தொழிலாளர் தின வாழ்த்துக்கள்’ என்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். தேசத்திற்கு தொழிலாளர்கள் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று தொழிலாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ‘‘Pekerja Kesuma Bangsa’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.









