இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் இன்னிசை நிகழ்ச்சி

உலகளவில் அனைவராலும் இசைப்புயல் என்றும் ஆஸ்கார் நாயகன் என்றும் அன்பாக அழைக்கப்படும் ஏஆர் ரஹ்மானின் மாபெரும் இசை நிகழ்ச்சி மலேசிய ரசிகர்களுக்காக நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்டார் பிளானட் நிறுவனத்தினர் ஆவர்.

ஸ்டார் பிளானட்டின் நிர்வாக இயக்குநர் டத்தோ ஆலன் ஃபூ,இயக்குநர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோருடனான அண்மையில் நடந்த சந்திப்பு கூட்டத்தில் வரும் ஜூலை 27ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்றும் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கும் ரசிகர்களும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் என்றனர். இசைத் துறையில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஏஆர் ரஹ்மானை இசை நிகழ்ச்சியை நடத்துவதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம்.

நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கோடிக்கணக்கான மக்களை கவர்ந்த ஏஆர் ரஹ்மானின் புகழ்பெற்ற பாடல்கள் நிச்சயம் ரசிகர்களுக்கு மனமகிழ்ச்சியையும் புத்துணர்வையும் வழங்கும் என நம்புவதாக ராஜேந்திரன் தெரிவித்தார்.  இந்த மாபெரும் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் வரும் மே 8ஆம் தேதி பிற்பகல் 2 மணி தொடங்கி ticket2U.com.my அல்லது my.bookmyshow.com என்ற அகப்பக்கத்திலும் வலம் வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here