ஜோகூர், இஸ்கந்தர் புத்ரியில் உள்ள வன நகர சொத்து மேம்பாட்டுப் பகுதியில் 770 ஏக்கரை வரியில்லா மண்டலமாக மாற்ற ஐந்து மசோதாக்களுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. சுங்கம், கலால், இலவச மண்டலங்கள், விற்பனை மற்றும் சேவை வரி சட்டங்களில் திருத்தம் செய்வது உள்ளிட்ட ஐந்து மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டன.
மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டு, தொடர்புடைய சட்டங்கள் திருத்தப்பட்டவுடன், தீர்வையற்ற மண்டலங்களான லாபுவான், லங்காவி, தியோமான் மற்றும் பங்கோர் ஆகியவை போல் பாரஸ்ட் சிட்டியும் இயங்கும்.








