கலவரத்தின் போது ஆயுதங்களை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் 28 பேர் கைது

பினாங்கு பட்டர்வொர்த் ஜாலான் ராஜா உடாவில் நடந்த கலவரத்தின் போது ஆயுதங்களை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். 17 முதல் 51 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் இன்று மாவட்டத்தில் பல இடங்களில் கைது செய்யப்பட்டதாக வட செபெராங் பிறை காவல்துறைத் தலைவர் அஸ்ரி ஷாஃபி தெரிவித்தார்.

சந்தேக நபர்களில் சிலருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் ஆத்திரமூட்டல் காரணமாக இந்த சம்பவம் வெடித்ததாக அவர் கூறினார். கலவரத்தின் போது ஆயுதங்களை வைத்திருந்ததற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 148 இன் கீழ் மற்ற சந்தேக நபர்களை நாங்கள் தேடி வருகிறோம் என்று அவர் கூறினார். இன்று அதிகாலை, ஜாலான் ராஜா உடாவில் உள்ள ஒரு வளாகத்தின் முன்  ஆயுதம் ஏந்திய ஒரு குழு வாகனத்தை சேதப்படுத்துவதைக் காட்டும் நான்கு வினாடி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here