தாவாவ் ஜெட்டியில் RM170,000 மதிப்புள்ள போதைப்பொருளுடன் ஆடவர் கைது!

கோத்தா கினாபாலு:

தவாவில் உள்ள பழைய CIQ படகுத்துறையில் 170,000 ரிங்கிட் மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன் (சியாபு) மற்றும் எக்ஸ்டசி மாத்திரைகளை வைத்திருந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை சுங்கத் திணைக்களம் கைது செய்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) மதியம் 2.36 மணியளவில் நடந்த சோதனையில், சந்தேகப்படும்படியாக பெரிய பெட்டியைக் கொண்டு வந்த ஒருவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக சபா சுங்கத்துறை துணை இயக்குநர்-ஜெனரல் டத்தோ முகமட் நசீர் டெராமன் தெரிவித்தார்.

22 வயதான சந்தேகநபர் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.

சந்தேகநபர், டீ பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட போதைப்பொருட்களை, தவாவிலிருந்து கடல்வழியாக பூலாவ் செபாட்டிக்கு கடத்தினார் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here