கென்யாவில் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 228ஆக அதிகரிப்பு

நைரோபி:

கென்யாவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 228 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகப் பெய்த கனமழையால் நாட்டின் பல இடங்களில் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டன.

மே மாதத்திலும் கனமழை இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதால் கென்ய மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தாழ்வான பகுதிகளிலும் மலையடிவாரங்களிலும் ஆற்றின் ஓரங்களிலும் வாழ்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

கனமழை காரணமாகக் கென்யாவின் போக்குவரத்து கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் என்பன சேதமாகியுள்ளன.

வீடுகள் பல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 200,000க்கும் அதிகமானவர்கள் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here