கொள்ளை சம்பவத்தின் போது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த உடல்பேறு குறைந்தவர்

புக்கிட் மெர்தாஜாம்: குபாங் செமாங்கில் உள்ள குவார் பெராஹுவில் உள்ள ஒரு  வீட்டில்  கொள்ளை சம்பவத்திற்கு பிறகு உடல்பேறு குறைந்த ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி அடைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.  உயிரிழந்தவர் 40 வயதுடைய வாய் பேச முடியாதவர் செபராங்  பிறை தெங்கா காவல்துறைத் தலைவர் ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.

70 வயதுடைய அவரது தாயாரும் தனி அறையில் கட்டி வைக்கப்பட்டிருந்தார். அவரது வாயில் துணியால் அடைக்கப்பட்டு டேப் ஒட்டப்பட்டிருந்தது. அவரது வீடு சூறையாடப்பட்டதையும், அவரது மகன் சுயநினைவின்றியும், அவரது மனைவியும் கட்டிவைக்கப்பட்டிருப்பதை கண்ட உயிரிழந்தவரின் தந்தை எட்டாக்கனி  காலை 8.36 மணிக்கு காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

வாய் பேச முடியாதவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனையின் துணை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினார் என்று ஹெல்மி கூறினார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செபராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பராங்குகளுடன் ஆயுதம் ஏந்திய இருவர் வீட்டினுள் நுழைந்து  இருவரையும் கட்டிவைத்து வீட்டை சூறையாடியதாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளையர்கள் பணம் மற்றும் தொலைக்காட்சி பெட்டியுடன் தப்பிச் சென்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவுவதற்காக 40 வயது மதிக்கத்தக்க உள்ளூர் நபரை போலீசார் கைது செய்தனர். சந்தேகநபர் கடந்த 10 குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக தண்டனை பெற்றவர் ஆவார். மற்ற சந்தேக நபர்களை தேடும் முயற்சி நடந்து வருகிறது. குற்றவியல் சட்டம் பிரிவு 302இன் கீழ் கொலை வழக்காக விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here