எனக்கு வந்த கேப்டன் பதவியை நான்தான் தோனிக்கு கொடுத்தேன் என ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார்.
உலகக் கோப்பை 2007:
டி20 உலகக் கோப்பை தொடரானது, 2007ஆம் ஆண்டில் தான், முதன்முதலாக வென்றது. அப்போது, கோப்பை வென்ற இந்திய அணியை, கேப்டன் மகேந்திரசிங் தோனி தான் வழிநடத்தி இருந்தார்.
சச்சின் பேட்டி:
ஐபிஎல் 2024 தொடருக்காக, ஜியோ சினிமாவுக்கு பேட்டிகொடுத்த அவர், ”2007-ல் அப்போதைய பிசிசிஐ தலைவர் சரத் பவார், அப்போது என்னிடம் வந்து, டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை நீங்கள்தான் வழிநடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்” எனக் கூறினார்.
உடல்நிலை காரணம்:
மேலும் பேசிய சச்சின், ”அப்போது எனக்கு உடல்நிலை பிரச்சினைகள் இருந்தன. சில போட்டிகளில் விலக வாய்ப்புகள் இருந்ததால், கேப்டன் பதவியை ஏற்கவில்லை. கேப்டனாக பொறுப்பேற்றால் அனைத்து போட்டிகளில் விளையாட வேண்டும். இதனால்தான், கேப்டன் பதவியை ஏற்க மறுத்தேன்” எனக் கூறினார்.
தோனியிடம் இருந்த திறமை:
தோனி குறித்துப் பேசிய சச்சின், ”தோனிக்கு அருகே, பல போட்டிகளில் ஸ்லீப் திசையில் நின்று இருக்கிறேன். அப்போது, இந்த சூழ்நிலையில் என்ன முடிவு எடுப்பாய் என பலமுறை கேட்டிருக்கிறேன். அதற்கு, அவர் சிறந்த பதில்களைதான் தந்தார். இதனால்தான், அவருக்கு கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும் என பரிந்துரை செய்தேன்” என்றார்.
மூத்த வீரர்கள் இருந்தும்:
டி20 உலகக் கோப்பை 2007 தொடரில், சச்சின், ராகுல் டிராவிட், அனில் கும்ளே போன்றவர்கள் விளையாடவில்லை. விரேந்தர் சேவாக், யுவராஜ் சிங் போன்ற மூத்த வீரர்களை தாண்டிதான், தோனிக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.