கோலாலம்பூர்:
சுங்கை ஆராவில் உள்ள பிரபல Domino Pizza உணவகம் ஒன்று விநியோகித்ததாக நம்பப்படும் ரசீது ஒன்றில், இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வார்த்தைகள் அச்சிடப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகியுள்ளது.

ஆன்லைன் வழி உணவை வாங்கிய பின் வழங்கப்பட்ட ஒரு ரசீதிலேயே இந்த வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக, பாயான் லெபாஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்ருல் மஹாதீர் அஸிஸ் தனது முகநூலில் வெளியிட்டுள்ள ஓர் பதிவில் தெரிவித்தார்.
குறித்த ரசீது தொடர்பான விளக்கம் பெறுவதற்காக தாம் பினாங்கு, சுங்கை ஆராவிலுள்ள குறித்த உணவகத்திற்கு சென்று விசாரித்ததாகவும், பின்னர் சம்பந்தப்பட்ட உணவு நிறுவனத்திற்கு எதிராக காவல்துறையில் புகார் செய்துள்ளதாகவும் கூறினார்.
இந்த விவகாரமானது 3R ஐ உட்படுத்தியிருப்பதால், இதற்கு காரணமான நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.























