ரசீதில் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வாசகங்கள்: எண்மரிடம் போலீஸ் வாக்குமூலம்

பாலிக் பூலாவ்:

Domino Pizza துரித உணவகம் வழங்கிய ரசீதில் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வார்த்தைகள் இருந்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையில், எட்டு நபர்களின் வாக்குமூலங்களை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் இருவர் குறித்த துரித உணவகத்தின் தொழிலாளர்கள் என்று, பாராட் டாயா மாவட்ட காவல்துறைத் தலைவர் கமாருல் ரிசால் ஜைனால் கூறினார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 298 மற்றும் சிறு குற்றச் சட்டம் பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

நேற்று முன்தினம், இங்குள்ள கெனாரி அவென்யூவில் உள்ள Domino Pizza உணவகம் வழங்கியதாகக் கூறப்படும் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வார்த்தைகளைக் கொண்ட ரசீது ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here