தம்பின்: ஏப்ரல் 29 ஆம் தேதி ஃபெல்டா எஸ்ஜி கெலமாவில் உள்ள செம்பனை தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு 32 வயது ஆடவருக்கு சொந்தமானது என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போனதாக அவரது மனைவி புகார் அளித்துள்ளார். தம்புன் மாவட்ட காவல் துறைத்தலைவர் அமிருடீன் ஷாரிமான் கூறுகையில், ஆடவரின் உடலில் மேற்கொள்ளப்பட்ட DNA சோதனையில் இறந்தவர் முஹம்மது சயாபிக் சலேஹின் என்பது தெரியவந்தது. அவர் மார்ச் 25 முதல் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
அந்த ஆடவரின் அபிரேதப் பரிசோதனை மற்றும் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டன. அவை முஹம்மது சயாபிக் என்பவருடையது என்பதை நிரூபித்தது. இந்த வழக்கு திடீர் மரணம் என விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணைகள் நடந்து வருகின்றன என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 29 ஆம் தேதி அப்பகுதிக்கு அருகில் நீல நிற யமஹா எல்சி135, ஹெல்மெட் மற்றும் பெல்ட் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்தனர்.