வனிந்து ஹசரங்கா, சமீப காலமாகவே ஆக்ரோஷமாக விளையாடி வருகிறார். இதனால், அவருக்கு அவ்வபோது தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
இலங்கை, வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் போட்டி, இந்தியா, பாகிஸ்தான் ஆட்டத்தை மிஞ்சும் வகையில் ஆக்ரோஷமாக நடைபெற்று வருகிறது. இரு அணி வீரர்களும், மாறி மாறி பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
டி20 தொடரில் இலங்கை அணி கோப்பை வென்றபோது, உலகக் கோபையில் ஏஞ்சலோ மேத்யூஸை டைம் அவுட் முறைப்படி வெளியேற்றியதை, குத்திக்காட்டி டைம்அவுட் செலிபிரேஷன் செய்தனர். அடுத்து, ஒருநாள் தொடரை இலங்கை கைப்பற்றியபோது, மேத்யூஸ் ஹெல்மட் பிரச்சினையை கலாய்த்து, செலிபிரேஷன் செய்தனர்.
கோப்பை வென்றபோது மட்டுமல்ல, போட்டிகள் நடக்கும்போதும் இலங்கை, வங்கதேச வீரர்கள் ஆக்ரோஷமாக, முறைத்துக் கொண்டே விளையாடியதால், இரு அணிகளுக்கும் இடையிலான தொடர், உலக அளவில் கவனம் பெற்றது.
இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா, வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், சர்ச்சைக்குறிய வகையில் செயல்பட்டார். 37ஆவது ஓவரை வீசிவிட்டு சென்ற அவர், நடுவரிடம் தொப்பியை பெறும்போது, முறைத்துக் கொண்டே, வேகமாக தொப்பியை பறித்தார். இது குற்றமாக கருதப்படுகிறது.










