ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 68 பேர் மரணம்!

People are seen near to their damaged homes after heavy flooding in Baghlan province in northern Afghanistan Saturday, May 11, 2024. Flash floods from seasonal rains in Baghlan province in northern Afghanistan killed dozens of people on Friday, a Taliban official said. (AP Photo/Mehrab Ibrahimi)

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வருகின்றது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆங்காங்வே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகின்றது.

கடந்த வாரம் பாக்லான் மாகாணத்தில் மழை வெள்ளத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது.

இந்நிலையில் கோர் மாகாணத்தில் மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் முதல் கட்ட அறிக்கையின்படி சுமார் 68 உயிரிழந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகின்றது. மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக அம்மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here