கோலாலம்பூர்:
மலேசியா ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர், தோக்கியோவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது, அவரது அறையில் இன்று இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
நோர்சானா ஹனிம் ஹம்சா என்று அடையாளம் காணப்பட்டவர் உயிரிழந்ததை விமான நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
நரிடா அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தடைந்த விமானத்தில் தனது பணியை முடித்த பிறகு, நார்சானா தோக்கியோவில் ஓய்வில் இருந்ததாகவும், அவர் இன்று கோலாலம்பூருக்கு திரும்பும் விமானத்தில் பணிபுரிய திட்டமிட்டிருந்தார் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் நோர்சானாவின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, இந்த துயரமான செய்தியை அறிவித்துள்ளதுடன், இந்தக் கடினமான நேரத்தில் நோர்சானாவின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்கும் என்றும் அது கூறியுள்ளது.