சுழல் காற்றில் சிக்கிய விமானம் : பயணி ஒருவர் பலி – 30 பேர் படுகாயம்

 லண்டனில் இருந்து சிங்கப்பூர் வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்  சுழல் காற்றில் சிக்கியதில்  ஒருவர் உயிரிழந்தார். ஒரு அறிக்கையில், போயிங் 777-300ER விமானம் பாங்காக்கிற்குத் திருப்பி அனுப்பபட்டு இன்று பிற்பகல் 3.45 மணிக்கு தரையிறங்கியது. போயிங் 777-300ER விமானத்தில் பயணித்தவர்கள்  காயங்களுக்கு ஆளாகினர்  மற்றும் ஒரு உயிரிழப்பு இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். விமானத்தில் மொத்தம் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்தனர் என்று ஒரு முகநூல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இறந்தவரின் குடும்பத்தினருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டது. விமானத்தில் உள்ள அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கும் அனைத்து உதவிகளையும் வழங்குவதே எங்கள் முன்னுரிமை.

விமானத்தில் பயணித்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புகிறது. மோசமான வானிலை காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், விமானத்தில் பயணம் செய்த 30 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வழி அறியப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here