காஜாங்:
காஜாங், ‘ஏயோன் செராஸ் செலாத்தான்’ (AEON Cheras Selatan) வணிக வளாகத்திற்கு அருகிலுள்ள சில்க் நெடுஞ்சாலையின் (SILK Highway) ஓரத்தில் தனியாகச் சுற்றித் திரிந்த சுமார் 8 வயது சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவனது பெற்றோர் அல்லது உறவினர்களைக் காவல் துறை தீவிரமாகத் தேடி வருகிறது.
நேற்று மாலை சுமார் 4:30 மணியளவில் இச்சிறுவன் குறித்து காவல் துறைக்குத் தகவல் கிடைத்ததாகக் காஜாங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுவனின் வயது சுமார் 8 ஆண்டுகள்என்றும் , அவர் சுமார் 120 சென்டிமீட்டர் உயரம், 30 கிலோகிராம் எடை கொண்டவர் என்றும், கண்டுபிடிக்கப்பட்டபோது கருப்பு மற்றும் வெள்ளை நிற ‘டீ-ஷர்ட்’ (T-shirt) மற்றும் சாம்பல் நிறக் காற்சட்டை (Pants) அணிந்திருந்தார் என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் அல்லது அவனைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது காஜாங் மாவட்டக் காவல் தலைமையகம்: 03-8911 4222, பரிசோதனை அதிகாரி Sarjan Karunagaran Balan 012-244 9414 ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:






















