2024 பிஎஸ்ஏ பெண் விளையாட்டாளர் விருதுக்கு மலேசியாவின் தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
இந்த விருதுக்கு உலக அளவில் 5 பெண் ஸ்குவாஷ் விளையாட்டாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. பிஎஸ்ஏ எனப்படும் நிபுணத்துவ ஸ்குவாஷ் சங்கத்தின் இந்த விருது சனிக்கிழமை பெர்மிங் ஹாமில் உள்ள புக் ருத்துண்டாவில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் வெற்றியாளர் பெயர் அறிவிக்கப்படும். இதற்கான வாக்களிப்பு மே 27 திங்கட்கிழமை இரவு 11.59 மணிக்கு நிறைவு பெறுகிறது. இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மற்ற பெண் விளையாட்டாளர்கள் உலகின் முதல் நிலையில் உள்ள ஸ்குவாஷ் வீராங்கனை நூர் எல்ஷெர்பினி, எகிப்தின் நூரான் கோஹார்ட், ஹனியா எல் ஹமாமி, அமெரிக்காவின் ஒலிவியா வீவர் ஆகியோர் ஆவர்.





















