தொழில் நுட்ப வளர்ச்சியின் வழி நாட்டின் பொருளாதாரம் உயரும்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கல்வியால் மட்டுமே ஒரு சமுதாயம் உயர முடியும் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். அதே வேளை தொழில் நுட்பம் எவ்வளவு வளர்ச்சியடைகிறதோ அதே அளவு நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்  என்று ஏய்ம்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் 15ஆவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டான்ஶ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தமதுரையில் தெரிவித்தார்.

தொழில் நுட்ப வளர்ச்சிகேற்ப நம் மாணவர்களும் கல்விப் பயில வேண்டும் என்ற நோக்கில் 10 மில்லியன் ரிங்கிட் ஏய்ம்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்காக செலவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் தங்குமிடத்தை மேம்படுத்த 13 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

ஏய்ம்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் 15ஆவது பட்டமளிப்பு விழாவில் 642 மாணவர்கள் தங்களின் பட்டத்தை பெறுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மாணவர்களை ஊக்குவித்து அவர்கள் தங்களின் கல்வியை சிறப்புற கற்று பட்டம் பெற உதவிய பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் பட்டமளிப்பு விழாவின் சிறப்பு அம்சமாக மகுடம்  சூடும் வகையில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகாவின் துணைத்தலைவருமான டத்தோஶ்ரீ டாக்டர் சரவணன் முருகன் இணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டிருப்பது என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தமதுரையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here