பாப்புவா நியூ கினி நிலச்சரிவு: உதவி வழங்க மலேசியா தயார்- பிரதமர்

கோலாலம்பூர்:

நேற்று அதிகாலை பாப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு சம்பவத்திற்கு பின்னரான மீட்பு பணிக்கு உதவ மலேசியா தயாராக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது கவலையை தெரிவிப்பதாகவும், நிச்சயமாக நிலச்சரிவு நிகழ்ந்த பகுதி மலைகள் மற்றும் கரடு முரடானதாக இருப்பதால் மீட்பு பணி மிகவும் சவாலானதாக இருக்கும் என்று பிரதமர் X தளத்தில் வெளியிட்டுள்ள ஓர் பதிவில் தெரிவித்தார்.

பாப்புவா நியூ கினியின் தலைநகரிலிருந்து ஏறக்குறைய 600 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ளது காவ்கலம் என்ற கிராமத்தில், நேற்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இது 50க்கு மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் புதையுண்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here