ஆயுதம் ஏந்தி கொள்ளை: குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரிய முடிதிருந்துனர்

ஆயுதம் ஏந்தியபடி கொள்ளையடித்த குற்றச்சாட்டில் முடிதிருத்தும் நபர் ஒருவர்  செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார். முகமட் அல்டாஃப் இசிராஃப் ஜாஸ்லான் 21, இன்னும் மூவருடன் சேர்ந்து, முஹம்மது சஃபுவான் ஹாரிஸ் இப்ராஹிம் (26) என்பவருக்கு எதிராக ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள், மூன்று மொபைல் போன்கள் மற்றும் ஒரு தங்க நகை  ஆகியவை கொள்ளையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மே 16 ஆம் தேதி காலை 11 மணியளவில் குபாங் கெரியனில் உள்ள கம்போங் வகாஃப் ஸ்டானில் அவர் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றவியல் சட்டத்தின் பிரிவு 395 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்கப்படும். நீதிபதி அஹ்மத் பஸ்லி பஹ்ருதின் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 15,000 ஜாமீன் நிர்ணயம் செய்து, வழக்கை ஜூன் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here