சிங்கப்பூரிலிருந்து வந்த லோரிகளிலிருந்து 2.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உறையவைக்கப்பட்ட இறைச்சி பறிமுதல்

ஜோகூர் :

சிங்கப்பூரிலிருந்து வந்த லோரிகளிலிருந்து உறையவைக்கப்பட்ட இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவை மொத்தம் 135 டன் நிறை கொண்டவை என்றும், இதன் மதிப்பு 2.1 மில்லியன் ரிங்கிட் என்றும், அந்த இறைச்சி வகைகள் உரிமமின்றி இறக்குமதி செய்யப்பட்டிருந்தன என்றும் ஜோகூர் சுங்கத் துறை தெரிவித்துள்ளது.

மே மாதம் 21ஆம் தேதியன்று சிங்கப்பூரிலிருந்து வந்த ஐந்து லோரிகளிலிருந்து அந்த இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜோகூர் சுங்கத் துறை இயக்குநரான அமினுல் இஸ்மீர் முகமட் சொஹாய்மி தெரிவித்தார்.

“ஒவ்வொரு லோரியிலும் 27 டன் அளவிலான உறையவைக்கப்பட்ட இறைச்சி வகைகள் இருந்தன. பன்றி, மாடு, கோழி நெஞ்சு, கோழி இறக்கை ஆகிய இறைச்சி வகைகள் அவற்றில் அடங்கும் என்று நம்பப்படுகிறது” என்று அவர் கடந்த திங்கட்கிழமை (மே 27) நடைபெற்ற ஓர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here