சபாவின் கடலோரப் பகுதியில் இன்று பிற்பகல் 2.49 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என மெட்மலேசியா தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 4.4° வடக்கு மற்றும் 118.9° கிழக்கில், 10கிமீ ஆழத்திலும், சபாவின் செம்போர்னாவிலிருந்து கிழக்கே 50கிமீ தொலைவிலும் அமைந்திருந்தது” என்று X (முன்னாள் ட்விட்டர்) பதிவில் கூறியுள்ளது.








