சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்; ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் ஜூன் 12ஆம் தேதி அறிவிக்கப்படுவார்

நிபோங் தெபால்: சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் ஜூன் 12 அன்று அறிவிக்கப்படுவார். பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பெயர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெறும் ஒற்றுமை அரசாங்கத் தலைமை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்றார். வேட்பாளர்களின் பட்டியல் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் மற்றும் தேர்தல் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பினாங்கு மாநில தலைமைக் குழுவால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

செவ்வாய்கிழமை நடைபெறும் ஒற்றுமை அரசாங்க தலைமை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் செயல்முறையின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பெயரை வேட்பாளராக முன்வைப்போம். அதுதான் செயல்முறை – பிகேஆர் போட்டியிட்டாலும், எங்கள் கூட்டாளிகள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று அவர் நேற்றிரவு இங்கு சுங்கை பக்காப் இடைத்தேர்தலுக்கான ஒற்றுமை இயந்திரத்தை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பிகேஆர் தேர்தல் இயக்குனரான ரஃபிஸி, சுங்கை பக்காப் இடைத்தேர்தல் பக்காத்தான் ஹராப்பான்  மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு எளிதான போட்டியாக இருக்காது. ஏனெனில்  கடந்த மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலிடம் இழந்த இடத்தை மீண்டும் பெற வாய்ப்பு இருப்பதாக கூறினார்.  நாங்கள் இந்த இடைத்தேர்தலில் பின் தங்கியவர்களாக  உள்ளோம் என்ற உண்மையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் PNயிடம் இருந்து சுங்கை பக்காப் தொகுதியை மீட்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்  என்று அவர் கூறினார்.

சுங்கை பாக்காப் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளாக ஜூலை 6ஆம் தேதியை தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது, வேட்புமனு தாக்கல் ஜூன் 22ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்களிப்பு ஜூலை 2ஆம் தேதியும் நடைபெறும். மே 24ஆம் தேதி பதவியில் இருந்த நோர் ஜம்ரி லத்தீஃப் மரணமடைந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. கடந்த மாநிலத் தேர்தலில் PAS Nibong Tebal தலைவராக இருந்த Nor Zamri, PH இன் Nurhidayah Che Ros ஐ 1,563 வாக்குகள் பெரும்பான்மையுடன் தோற்கடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here