யூரோ போட்டியில் விலை உயர்ந்த அணி இங்கிலாந்து

 

வரும் வாரம் ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் 2024 யூரோ கால்பந்துப் போட்டியில் விலையுயர்ந்த அணியாக இங்கிலாந்து அணி விளங்குகின்றது. இவ்வணியில் இடம்பெற்றுள்ள ஹேரி கேன் , ஜூப் பெலிங்கம், பில்ஃபோடன்,  டெக்ரான் ரைஸ்,  கோல் பால்மர், புகாயோ சாக்கா உள்ளிட்ட நட்சத்திர ஆட்டக்ககாரர்களின் மதிப்பு மலேசிய ரிங்கிட்டின் படி   7.71 பில்லியன் ரிங்கிட் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதிலும் ரஷ்போர்ட் , கிரிலிஸ் உள்ளிட்ட ஆட்டக்காரர்களை நிர்வாகி கேரட் சவுத்கேட் இவ்வணியில் இணைத்திருந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

ஆனாலும் இந்த தற்போதைய அணி பிரான்ஸ் அணியை விட 1.49 பில்லியன் ரிங்கிட் அதிக மதிப்பை கொண்டுள்ளது. இருப்பினும் இங்கிலாந்து அணி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் 0-1 என்ற புள்ளிக்கணக்கில் ஐஸ்லாந்து அணியிடம் தோல்வி கண்டது.

விலையுயர்ந்த ஆட்டாக்காரர்களை கொண்டிருக்கின்ற போதிலும் அவ்வணி ஐஸ்லாந்து அணியிடம் தோல்வி கண்டது குறித்து கால்பந்து ஆர்வலர்கள் பலதரப்பட்ட கருத்துகளை முன்வைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here