உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 120 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய பாகிஸ்தான் அணியை, இந்திய பவுலர்கள் கையாண்ட விதம் பாராட்டை பெற்று வருகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நியூயார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
சிறப்பாக பந்து வீசிய அந்த அணியின் பவுலர்கள், இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 31 பந்துகளில் 42 ரன்களும், அக்சர் படேல் 18 பந்துகளில் 20 ரன்களும் எடுத்தனர்.







