உலகக்கோப்பை டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. இந்த சுற்றுக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
நேற்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை தென்னாப்பிரிக்காவும், வெஸ்ட் இண்டீசை இங்கிலாந்து அணியும் வென்றன. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பார்படாஸில் நேற்று நடைபெற்றது.









