ஷங்கர், கமல் காம்போவில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. உலக நாயகன் கமல் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘இந்தியன் 2’. பல ஆண்டு காலமாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்திற்காக கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனையடுத்து தற்போது இப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் ‘இந்தியன் 2’ படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தியன் 2′ படத்தின் மிரட்டலான டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. ஷங்கரின் ஸ்டைலில் பிரம்மாண்டமாக, கமலின் பல கெட்டப்களில் மிரட்டலாக இப்படம் உருவாகியுள்ளது டிரெய்லரிலே கன்பார்ம் ஆகியுள்ளது. மேலும், இந்த முன்னோட்ட காட்சியில் 106 வயதான இந்தியன் தாத்தா, பறந்து பறந்து சண்டை செய்வதை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது எப்படி என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இதுக்குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் ஷங்கர். அதி, இந்தியன் தாத்தாவின் வயது படத்தில் 106. இத்தனை வயதை கடந்த ஒருத்தரால் சண்டை போட முடியுமா என்று கேட்டால் கண்டிப்பாக முடியும். சீனாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் லூசி ஜியோ என்ற இருக்கிறார். 106 வயதான இவர் தற்போதும் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அனைத்து விதமான சண்டை செய்வார். பறந்து பறந்து அடிப்பார்.
இந்தியன் தாத்தா சேனாதிபதி கேரக்டர் அதே போல தான். வர்மக்கலையில் மாஸ்டரான அவர், உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு கொண்டவர். தினமும் யோகா தியானம் மேற்கொள்வர். முறையான ஒழுக்கம். சாப்பாடு பழக்கம் கொண்டவர். ஒரு முறை மட்டுமே தினமும் சாப்பிடுவார். கண்டிப்பாக அவர்களுக்கு வயது ஒரு தடை இல்லை, எந்த வயதிலும் என்ன விதமான சண்டையையும் செய்யலாம்’. இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.
‘இந்தியன் 2’ படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. ஷங்கர் ஸ்டைலில் பிரம்மாண்டமாக, முதல் பாகத்தை போனர் ஊழலுக்கு எதிரான படமாக ‘இந்தியன் 2’ உருவாகியுள்ளது டிரெய்லரிலே தெரிகிறது. அத்துடன் கமலும் பல கெட்டப்களில் படத்தில் மாஸ் காட்டியுள்ளார். ‘இந்தியன் 2’ படம் வரும் ஜுலை 12 ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது.




















